பழஞ்சோற்றுக் குழையல்
பச்சையரிசிக் கஞ்சி
பாட்டியின் அரையல்
பனங்கிழங்குத் துவையல்
படலை தோறும் பஞ்சம் தவழும்
பாட்டியின் பாசம் பாறையும் உருகும்
பாட்டன் பாமரன் படு சண்டியன்
பாசம் புரண்டது பந்தங்கள் சூழ்ந்தன
சொத்துக்காகச் சண்டையிட்டனர்
சோர்ந்து போகையில் தூக்கிவிட்டனர்
அடுத்தவன் வந்தால் அடித்து நொருக்கினர்
அன்பும் சண்டையும் அழகாய் இருந்தது
பணத்துடன் சேர்ந்து பவிசும் வந்தது
பண்புடன் சேர்ந்து கபடமும் வந்தது
நரிகள் வென்றிட நல்லவர் தோற்றனர்
கபடம் வாழ்ந்திட கண்ணியம் வீழ்ந்தது