Wednesday, 8 February 2023

மனிதம்

மனிதம் மனிதம் மனிதம் எங்கே தேடிப் பார்த்தேனே அது பணத்தின் பின்னால் ஒழிந்து கொண்டதை நானும் கண்டேனே

பந்தம் பாசம் சொந்தம் எல்லாம்
வேஷம் தான் ஐயா
அது காசைக் கண்டால் காற்றாய்
போகும் மாயம் கேள் ஐயா
அண்ணன் தம்பி பாசம் எல்லாம்
அருமை தான் ஐயா
அவர் பட்டம் பதவி வந்தபோது
விலகும் பார் ஐயா
பணம் கொட்டும்போது பாசமின்றி
விலக்கிய சொந்தம்தான்
முடி கொட்டும்போது பாசம் நாடி
தேடும் உள்ளம்தான்
ஓடி ஓடி உழைக்கும்போது
உயர்வாய் நினைத்தோமே
ஓய்ந்தபோது திரும்பிப்பார்த்தால்
ஒன்றும் இல்லையே
கோயிலுக்குச் செல்வதற்கும்
நேரம் இல்லையே - நம்ம
சொந்தங்களைப் பார்ப்பதற்கும்
நேரம் இல்லையே
வழும்போதே சொந்தங்களைப்
போற்றிடுவோமே - நம்
வாழ்க்கையைத்தான் வண்ணமாக
மாற்றிடுவோமே

No comments:

Post a Comment