அன்பினை பெற்றோர் தந்தார்
அறிவினைக் கற்றோர் தந்தார்
வீரத்தை எந்தை தந்தார்
வெற்றிக்காய் உழைக்க வைத்தார்
என்னவள் இன்பம் தந்தாள்
எல்லோரும் எல்லாம் தந்தார்
இறைவனின் கருணைதானோ
பணத்திற்காய் பணியா வீரம்
பதவிக்காய் அலையா பண்பு
உண்மைக்காய் உழைக்கும் எண்ணம்
உறவுக்காய் உதவும் உள்ளம்
ஊரினை உயர்த்தும் வேகம்
எதிரியாய் இருந்த போதும்
இடரினில் உதவும் உள்ளம்
அனைத்தையும் எந்தை தந்தார்
அவரே என் கடவுள் ஐயா
கோபத்தில் குறைந்தவன் அல்லன்
கயவர்க்குப் பயந்தவன் அல்லன்
சண்டைக்கும் சளைத்தவன் அல்லன்
சான்றோரை மதிப்பதில் வல்லன்
எவர் என்னை ஏழை என்பார்??? – ஆனாலும்
பொய்யில் நான் பரம ஏழை
போலியில் வறியோன் நானே
கள்ளமும் கபடமும் இல்லை
கயவரை மதிக்கவும் இல்லை
இவற்றில் நான் ஏழை தானே
என்னை யார் செல்வன் என்பார்
நீங்கள்தான் சொல்லுங்களேன்
எதிரியாய் இருந்த போதும்
இடரினில் உதவும் உள்ளம்
அனைத்தையும் எந்தை தந்தார்
அவரே என் கடவுள் ஐயா
கோபத்தில் குறைந்தவன் அல்லன்
கயவர்க்குப் பயந்தவன் அல்லன்
சண்டைக்கும் சளைத்தவன் அல்லன்
சான்றோரை மதிப்பதில் வல்லன்
எவர் என்னை ஏழை என்பார்??? – ஆனாலும்
பொய்யில் நான் பரம ஏழை
போலியில் வறியோன் நானே
கள்ளமும் கபடமும் இல்லை
கயவரை மதிக்கவும் இல்லை
இவற்றில் நான் ஏழை தானே
என்னை யார் செல்வன் என்பார்
நீங்கள்தான் சொல்லுங்களேன்
No comments:
Post a Comment