பாய்ந்து ஓடினேன் வீட்டினில் சொல்ல
கையில் பரிசு கண்டதும் என்னைக்
கனிவாய்க் கட்டி அணைத்திடும் அம்மா
கம்பீரமாய் ஒரு பார்வை பார்த்து
பரிவாய் முதுகில் தட்டிடும் அப்பா
அருமையான வேலை ஒன்றை
அழகாய்த் தந்தான் கடவுள் எனக்கு
இருவர் கையையும் இதமாய்ப் பிடித்து
எடுத்து வைத்தேன் முதற் சம்பளத்தை
எத்தனை மகிழ்ச்சி எத்தனை உணர்ச்சி
கண்டேன் சொர்க்கம் பெற்றோர் கண்ணில்
எங்கே கிடைக்கும் இந்தச் சொர்க்கம்
எதிலே கிடைக்கும் இத்தனை சுகம்
கண்டேன் சொர்க்கம் பெற்றோர் கண்ணில்
எங்கே கிடைக்கும் இந்தச் சொர்க்கம்
எதிலே கிடைக்கும் இத்தனை சுகம்
No comments:
Post a Comment