Monday, 20 May 2024

வாழ்க்கை

அன்பு - அது
இதயத்தின் மொழி

அழுகை - அது
கோழையின் இயலாமை

முயற்சி - அது
வெற்றிக்கு அத்திவாரம்

பணிவு - உன்னை
உயரவைக்கும் ஏணி

பட்டம் - உனது
உயர்வைக் காட்டும் கண்ணாடி

பதவி - உனக்குப்
பெருமை சேர்க்கும் பொன்விலங்கு

பணம் - உன்
இதயத்தை இரும்பாக்கும் இரசாயனம்

மமதை - உன்னைத்
தனிமைப்படுத்தும் பம்பரம்

இளமை - நீ
சாதிக்கும் காலம் இது

முதுமை - உன்னை, உலகை
உணரும் நேரமிது

No comments:

Post a Comment