Monday, 20 May 2024

கடவுள் பேசினால்

 மனிதா!!


முயற்சிதான் நான்
முழுதாய் எனை.நம்பு
படிக்காமல் நீ திரிந்து
பலநேர்த்தி தனைப் போட்டு
பரீட்சைப் பெறுபேறு
பாங்காய் நீ கேட்டால்???????

உண்மைதான் நான்
உரக்கக் கூறிடு
உலகத்துப் பொய் எல்லாம்
உனக்காய்ச் சொல்லியே
எல்லாம் அவன் செயல்!!!
என்றொரு வரியினை
எடுத்து நீ இயம்பினால்
என்னடா நான் செய்வேன்?

தன்னம்பிக்கை என்பது
நான்தான் மனிதா!!
உன்னை நம்பிடு
உலகை வென்றிடு
உன்னை நம்பிட
உள்ளம் மறுத்தால்
ஆயிரம் நேர்த்திகள்
அழகாய்ச் செய்யினும்
வெற்றி என்பது
வெறுமனே கனவுதான்!!!

அடுத்தவன் மகிழ்ச்சியில்
ஆனந்தம் கண்டிடு
அதுதான் நான் என
அழகாய் நம்பிடு.
ஏழையின் கல்விக்கு
எந்நாளும் உதவிடு
இல்லாத மனிதனின்
பசியைப் போக்கிடு
ஏழையின் சிரிப்பினில்
எனை நீ கண்டிடு

No comments:

Post a Comment