Monday, 20 May 2024

ஆண்டவன் படைப்பு

 வெற்றிகள் எத்தனைதோல்விகள் எத்தனை?
சிந்தித்துப் பார்க்கையில் விந்தைகள் எத்தனை?

வெற்றிக் களிப்பினில் உள்ளம் குளித்திட
மிடுக்காய் நடந்த கணங்கள் எத்தனை?

தோல்வியைக் கண்டு துவண்டு கலங்கியே
துக்கத்தில் உளன்ற கணங்கள் எத்தனை?

ஏழ்மையில் நாமும் உழன்ற போதிலே
எட்டி ஓடிய உறவுகள் எத்தனை?

ஏழையே ஆயினும் எனது உறவென்று
தூக்கி நிறுத்திய உறவுகள் எத்தனை?

செல்வம் கையிலே கொழிக்கும் போதிலே
சிரித்து ஒட்டிய உறவுகள் எத்தனை?

தன்னலம் தன்னலம் தன்னலம் என்று
தமக்காய் வாழும் சிந்தைகள் எத்தனை?

அடுத்தவர் உயர்வில் இன்பம் கண்டு
அன்பே சிவமாய் வாழ்பவர் எத்தனை?

பக்திப் பழமாய் வெள்ளை வேட்டி
பண்பே இன்றி வாழ்பவர் எத்தனை?

எத்தனை மனங்கள் எத்தனை குணங்கள்
எல்லாம் அவனே படைத்தவை தானே

விருப்பு வெறுப்பு இல்லா இறைவன்
விரும்பிப் படைத்த உலகம் கண்டோம்

ஆசை இல்லா அன்புக் கடவுள்
அழகாய்ப் படைத்த உலகம் கண்டோம்

No comments:

Post a Comment