தரையினில் அமர்ந்து தாயின் மடியில்
தலைவைத்து உறங்கும் தாழாத சுகமது
பஞ்சு மெத்தையில் பட்டு விரிப்பினில்
கொஞ்சும் இசையுடன் உறங்கிடில் வருமா???
கட்டாந் தரையினில் வட்டமாய் அமர்ந்து
கூட்டமாய் உண்டிடும் கொள்ளை சுகமது
எட்டாத் தூரத்தில் எல்லோரும் பிரிந்து
கொட்டிய பணத்தில் கொள்ளை போனதே!!!
No comments:
Post a Comment