நண்பர்கள் எல்லாம் நாலு மணிக்கு
நந்நீர் கிணற்றில் நலமாய்க் கூடினர்
குனிந்த தலையும் குமுட்டுச் சிரிப்பும்
குமரிகள் வந்தனர் குடிநீர் அள்ளிட
திருவிழா வந்தது காளையர் கூடினர்
கச்சானும் வாங்கினர் கன்னியும் தேடினர்
பத்துத் நாளும் பத்து விதத்தில்
மொத்த ஊரும் பக்தியில் உருகும்
வெள்ளை வேட்டியும் பட்டுச் சால்வையும்
வெற்றுமார்புடன் சுற்றி வந்தனர்
கழுத்திலும் கையிலும் பொன்னது மின்னிட
காஞ்சிபுரத்துடன் கண்கவர் மேனியர்
வானம் பார்த்து வயல்களை உழுது
வளமாய் வாழ்ந்த காலமும் போச்சு
கிளித்தட்டும் கிட்டிப்புள்ளும்
நிதமும் ஆடிய காலமும் போச்சு
பனம் பழமும் பனங்கட்டிக் கூழும்
அரைச்ச குழம்பும் அரிசிமாப் புட்டும்
வட்டமாய் அமர்ந்து கூட்டமாய் உண்டு
கும்மாளம் போட்ட முற்றமும் போச்சு
மாற்றம் ஒன்றே மாறாமல் போச்சு
மானிடம் இங்கே தொலைந்தே போச்சு
No comments:
Post a Comment