பக்கத்தில் உனையிருத்தி
பக்குவமாய் சோறூட்டி
பைந்தமிழ் பல பயின்று
பள்ளிக்கு அனுப்பி வைத்தாள் !!
உனை வளர்த்து ஆளாக்க
அவள் பட்ட துன்பங்கள்???
நீ உலகில் வளம் பெறவே
அவள் போட்ட வேண்டுதல்கள்????
நீயின்று வெளி நாட்டில்
உன் அன்னை தனி வீட்டில்.
பரிமழக்கா பாத்திடுவா
பணமிங்கு நானனுப்ப.
பணத்திற்கு பாசத்தை
யார் தருவார் இவ்வுலகில்?
பட்டு மெத்தை நீ கொடுத்தால்
பாசமதை யார் தருவார்?
உன் அன்னை அன்றுன்னை
விடுதிக்கு அனுப்பி விட்டு
உலகெங்கும் தான் சுற்றி
ஊரில் உன்னை விட்டிருந்தால்???
அப்போது புரிந்திருப்பாய்
அன்னையவள் அருமைதனை!!
இப்போது உன் தேவை
பை நிறையப் பணம் தானே??
வயோதிபர் விடுதிக்கு
உன் பிள்ளை உனையனுப்பும்.
இல்லையேல் தனக்கொரு
தனி வீ டு தேடிவிடும்.
அன்றுதான் நீ உணர்வாய்
அன்னையவள் வலியதனை.
அப்போதும் கூட ......
வானிலே உன் அன்னை
வணங்கிடுவாள் உனக்காக!!!!!!!!!!!
No comments:
Post a Comment